TamilNN

புலிகளை தடை செய்ததற்கான ஆதாரங்களை தேச நலன் கருதி வெளியிட முடியாது! மத்திய அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை தேச நலன் கருதி வெளியிட முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் கடந்த 1992 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு  ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.10 2010 அன்று அறிவிப்பாணை  வெளியிட்டது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா?  என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம்  அமைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பாயத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர்  பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட பலர் ஆஜரானார்கள். என்றாலும், மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை  உறுதி செய்து கடந்த 12.11.10 அன்று தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு  தாக்கல் செய்துள்ளார். அதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் புகழேந்தியும் மனு தாக்கல் செய்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த  வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய  அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜரானார். மனுதாரர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர்  எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் வைகோ ஆஜரானார்கள்.

வைகோ வாதிடுகையில்,” இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துடன் தமிழகத்தையும் இணைப்பதற்கு  விடுதலைப்புலிகள் முயற்சிக்கின்றனர் என்ற காரணத்தைக் கூறிதான் தீர்ப்பாயத்தின் மூலம் அந்த இயக்கத்துக்கு தடை  பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து ஒரு பிடிமண் கூட இலங்கைக்கு வராது என்று இயக்கத் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். தமிழகத்தை  ஈழத்துடன் இணைப்பதற்கு விடுதலைப்புலிகளுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.

ஈழத்தில் தமிழர்களை அழிப்பதற்கு பல்வேறு நாடுகளும் ஆயுத சப்ளை செய்துவரும் நிலையில், அங்கு தமிழ் ஈழம்  அமைவதுதான் ஒரே தீர்வு என்று பேசியவர்கள் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவது குற்றமாகாது என்று இதே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்றார்,

அதேப்போன்று புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணனும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், “எந்த இயக்கம் தடை செய்யப்பட்டதோ,  அந்த இயக்கத்துக்கு நிவாரணம் கோருவதற்காக அதன் உறுப்பினரோ அல்லது நிர்வாகியோதான் வழக்கு தாக்கல் செய்ய  வேண்டும். ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வைகோ உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ இல்லை. எனவே இந்த  வழக்கை தொடர அவருக்கு தகுதி இல்லை.

விடுதலைப்புலிகளுக்கு தடை செய்து தேசிய தீர்ப்பாயம்தான் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து உயர் நீதிம்ன்றத்தில் வழக்கு தாக்கல்  செய்ய முடியாது. உயர் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும்.

அந்த இயக்கத்தை ஏன் தடை செய்தோம்? என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதற்கான ஆவணங்களும் உள்ளன. தேச நலன்  கருதி அவற்றை வெளியிட முடியாது” என்றார்.

இந்த இருதரப்பு வாதததை தொடர்ந்து, இந்த வழக்கை நீதிமன்றம் வருகிற 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய யுவராஜை வாழ்த்திய சச்சின்!
புற்று நோய் சிகிசைக்ககாக அமெரிக்கா சென்றிருந்த யுவராஜ்சிங் லண்டனிலிருந்து இன்று காலை டெல்லி திரும்பினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர்களில் ஒருவரான யுவராஜ்சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். 60 நாட்கள் நடைபெற்ற புற்று நோய் சிகிச்சையில், அவருக்கு 3 முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு குணமடைந்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு ஒரு மாத கால ஓய்விற்காக லண்டன் சென்றார். ஓய்வுக்கு பிறகு லண்டனில் இருந்து இன்று காலை டெல்லி திரும்பினார். யுவராஜ் சிங்கை அழைத்து செல்ல யுவராஜ்சிங்கின் தாயார் ஷப்னம் மற்றும் அவரது உறவினர்கள் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து அவரை வரவேற்றனர். யுவராஜ்சிங் தாயகம் திரும்பும் தகவலை அறிந்து கொண்ட அவரது ரசிகர்களும் அங்கே திரண்டு இருந்தனர்.

சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங்குக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சீக்கிரமாக குணமடைந்து நாடு திரும்பிய சகோதரார் யுவராஜ்சிங்கிற்கு எனது வாழ்த்துக்கள். புற்று நோய் என்னும் கொடிய நோயுடன் போராடி வென்ற யுவியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

புலிகள் இன்னமும் அழியவில்லை! பீதியில் அமைச்சர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அவர்களின் போராட்டமும் அழிந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அந்த இயக்கம் இன்னமும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதை ஜெனிவா சென்றபோது அறிந்து கொள்ள முடிந்தது.

இவ்வாறு இலங்கையின் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரான  ரிச்சார்ட் பதியுதீன் கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்  கலந்து கொண்டு பேசும் போதே  இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

உலகின் மிகச் சிறந்த தொழில் முனைவோரில் ஒருவராக தேர்வான இன்போசிஸ் நாராயணமூர்த்தி!
உலகின் மிகச் சிறந்த தொழில்  முனைவோரில் ஒருவராக இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கிலிருந்து வெளியாகும் பிரபல Fortune  இதழ் உலகம் முழுவதும் உள்ள சிறந்த தொழில் முனைவோரைக் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளது.

இதில் சமீபத்தில் காலமான அப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜொப்ஸ் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுகெர்பர்க் ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

தங்களது யோசனைகளை நிறுவனத்தில் செயல்படுத்தியவர்கள் என்று இவர்களது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவம் இன்போசிஸ் டெக்னாலஜீஸை உருவாக்கிய தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் நாராயணமூர்த்தி என்று   Fortune   இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

மேலை நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கம்ப்யூட்டர் துறையில் இந்தியாவாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் நாராயண மூர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தை உருவாக்கி விரிவுபடுத்தியதோடு அல்லாமல் இவரால் பல லட்சம் கோடி டொலர் இந்திய அரசுக்குக் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிறிய அளவில் தொடங்கப்படும் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்வதற்கு அதில் உள்ள குழுவினரின் அயராத செயல்பாடு மிகவும் அவசியம் என்பதை இன்போசிஸ் நிறுவன கட்டமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது என்று  Fortune   இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தை தியாகம் செய், நாளை உனதாகும் என்று நாராயணமூர்த்தியின் வாசகம் மிகச் சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் அவருக்கு 10 வது இடத்தை பிடித்துத் தந்துள்ளது.

ஐந்து பேரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலகின் மிகச் சிறந்த இதழான  Fortune  இல் இடம்பெற்றது மகிழ்வுக்குரிய விடயமாகும்.

வலதில் ஓர் இதயம்! கோடியில் ஒரு பெண்ணுக்கு நடந்த அறுவைசிகிச்சை
மனிதனுக்கு முக்கியமானது இதயம். அது பொதுவாக இடப்பக்கத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால் இந்த சென்னை பெண்ணுக்கு வலது பக்கம் இதயம் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவருக்கு இதயம் மட்டுமல்ல வலதுபுறம் இருக்க வேண்டிய கல்லீரல் குடல் போன்ற பாகங்கள் இடதுபக்கமாகவும், இடதுபுறம் இருக்கவேண்டிய உறுப்புகள் வலது புறமாகவும் மாறி இருக்கிறது.

இந்த அதிசயப் பெண்ணின் பெயர் இந்திரா (வயது 58). கணவர் பெயர் அழகுவேல். பெரம்பூர் ஆனந்தவேல் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

அழகுவேல் ராணுவத்தில் பணியாற்றி 7 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். தற்போது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக இந்திராவுக்கு அடிக்கடி நெஞ்சுவலி, மயக்கம், சோர்வு ஏற்பட்டது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் காட்டியபோது அவர்கள் இது ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும், நிறைய செலவாகும் என்று கூறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்திராவை கடந்த 25-ந்தேதி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் உள்ளிட்ட பாகங்கள் வலது பக்கத்திலும், வலது பக்கம் இருக்க வேண்டிய கல்லீரல், குடல் உள்ளிட்ட பாகங்கள் இடது பக்கத்திலும் இருப்பதை ஸ்கேன் மூலம் அறிந்தனர் இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

மறுநாளே (26-ந்தேதி) இந்திராவுக்கு ஆபரேஷன் செய்ய அரசு மருத்துவமனை டீன் கனகசபை ஆலோசனை வழங்கினார். இதையடுத்து அரசு மருத்துவமனை இதய நோய் அறுவை சிகிச்சை கூடுதல் பேராசிரியர் டாக்டர் மீனாட்சி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்திராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இடது பக்கம் இதயம் இருந்தால் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வார்களோ, அதுபோல் வலது பக்கத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து அடைப்புகளை சரிசெய்தனர். பின்னர் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து குணம் அடைந்த இந்திரா இன்று காலை பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். இதுபற்றி இந்திராவின் கணவர் அழகுவேல் கூறியதாவது:-

எனது மனைவிக்கு வலது பக்கம் இதயம் இருப்பதாக டாக்டர்கள் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஏற்கனவே 1982-ல் ஒருமுறை இந்திராவுக்கு பெரம்பூர் அகரம் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது என் மனைவி இந்திராவுக்கு வலது பக்கத்தில் இதயம் இருப்பதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்கள். கோடியில் ஒருவருக்கு தான் வலப்பக்கத்தில் இதயம் இருக்குமாம்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான வழக்கு வெள்ளி வரை ஒத்தி வைப்பு!
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரும் வழக்கு விசாரணை எதிர் வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை இந்திய ஜனாதிபதியான பிரதீபா பட்டேல் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரணையின் பின் 3 பேரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்ற முல்லர், அசாமை சேர்ந்த பாஸ் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அதன் நிலைமையை பார்த்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து வழக்கு எதிர்வரும் 30ம் திகதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தனர்.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளின் நலனுக்கு 25 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு!
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாம்களில் தங்கி வாழும் ஈழத் தமிழர்கள் நலனுக்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களையும் ஈழத் தமிழர்கள் ஏற்கனவே பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு.

தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாம் களிலிருந்து கல்லூரி களில் உயர் கல்வி மேற்கொள்ளும் இலங்கைத் தமிழ் அகதிகள் குடும்ப மாணவ மாணவியருக்கு, ஆண்டு ஒன்றுக்கு இளங்கலை பயிலுவோருக்கு 1200 ரூபாயும், இளம் அறிவியல் பயிலுவோருக்கு 1250 ரூபாயும், முதுகலை பயிலுவோருக்கு 1330 ரூபாயும், முதுகலை அறிவியல்பயிலுவோருக்கு 1650 ரூபாயும், தொழில்நுட்ப கல்வி பயிலுவோருக்கு 850 ரூபாயும், பொறியியல் பயிலுவோருக்கு 2750 ரூபாயும், மருத்துவம் பயிலுவோருக்கு 4700 ரூபாயும், கால்நடை மருத்துவம் பயிலுவோருக்கு 1400 ரூபாயும், சட்டம் பயிலுவோருக்கு 860 ரூபாயும், வேளாண்மை அறிவியல் பயிலுவோருக்கு 2850 ரூபாயும், வழங்கப்படும்.

இதன் மூலம், 1000 இலங்கை தமிழர் அகதி மாணவ மாணவியர் பயன் பெறுவர். இதற்காக அரசுக்கு 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இலங்கை அகதிகள் முகாம்களில் தற்பொழுது இயங்கி வரும் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு தடவை மானியமாக ஒவ்வொரு குழுவிற்கும் 10000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளர். இதனால் அரசுக்கு 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடியே 33 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும்; முகாம்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பழுதுபார்த்தல்,

சாலைகளை சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், ரேஷன் கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளுக்காக 20 கோடியே 66 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆக மொத்தம் இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மக்களுக்காக அமல்படுத்தப் படும் அனைத்து நலத் திட்டங்களையும் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்த ஆணையிட்டுள்ளார்கள்.

அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம், அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மேலும் வளம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்றது அமெரிக்கத் தீர்மானம்!
சுவிஸின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்று உள்ளது.

இத் தீர்மானத்தின் வெற்றியால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற இறுதிக்கட்ட விவாதத்தில் மொத்தமாக 47 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும்,  08 நாடுகள் வாக்களிப்பில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டன.

மலேசியாவில் வேலை பார்த்த தமிழரின் கையை வெட்டிய மர்ம நபர்கள்!
47 வயதான முருகேசன் மலேசியாவில் கடந்த 16 ஆண்டுகளாக சலூன் கடையில் வேலை செய்து வருகின்றார்.

இவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம் கடைக்கு வந்த இரண்டு பேர் முருகேசனின் கையை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

கையை வெட்டிய சம்பவம் தொடர்பாக முருகேசன் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தேன். அப்போது வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்தார். கழிவறையை பயன்படுத்தலாமா என்று கேட்டார். நான் வழி காட்டியபோது, இன்னொருவர் திடீரென வந்து என்னை பிடித்துக் கொண்டார்.

என்னிடம் பேசியவர் என் இடதுகையை அரிவாளால் துண்டாக வெட்டினார். ரத்தம் பீறிட்டது. வலியால் அலறித் துடித்தேன். வெட்டிய கையுடன் இருவரும் தப்பி விட்டனர். யார், எதற்காக இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை.

எனது கைகளை நம்பிதான் நான் பிழைக்கிறேன். எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறேன் என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை மலேசியப் பொலிஸார் முடுக்கி விட்டுள்ளார்கள்.

ஈழத்தில் 65000 விதவைகள் உருவாக இந்தியாவே காரணம்!
இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் 65000 க்கும் மேற்பட்ட விதவைகள் உருவாகுவதற்கு இந்திய மத்திய அரசு தான் காரணம் என்று இந்திய தேசிய மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான பத்மாவதி  குற்றம் சாட்டியுள்ளார்.

மகளிர் தின விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அதிர்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த கூட்டத்தில் அவர் முக்கியமாக கருத்துத் தெரிவிக்கையில்,

பக்கத்து நாடான இலங்கையில் 1 .30 இலட்சம் அப்பாவித் தமிழ்மக்களை இந்திய அரசின் நேரடி உதவியுடன் சிங்கள இராணுவம் கொடூரமாக  சுட்டுக் கொன்றது.

இதனால் 65000 மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மத்திய அரசு தான்  இந்தக் கொடூரச் செயலுக்கு முக்கிய காரணம்.